சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் 100.75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை, தினசரி விலை நிர்ணயம் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்துவதும், குறைப்பதுமான நிலை தற்போது நடந்து வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை யாரும் எதிர்பாராத நிலையில் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வால், ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்தது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ கடந்த நிலையில், சென்னை யில் கடந்த 1-ந் தேதி பெட்ரோல் ரூ.100-ஐ கடந்தது. நேற்றும் பெட்ரோல் விலை உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தில் இருந்து வருகிறது.
அதன்படி, பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 31 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 100 ரூபாய் 44 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், டீசல்நேற்று லிட்டருக்கு 19 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 93 ரூபாய் 91 காசுக்கு விற்பனை ஆனது.
இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 100.75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.