சென்னை போரூர் 7 வயது சிறுமி ஹாசினி கொலை வழக்கில், தஷ்வந்த் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை போரூர் 7 வயது சிறுமி ஹாசினி கொலை வழக்கில், தஷ்வந்த் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை போரூரைச் சேர்ந்த ஹாசினி என்ற 7 வயது சிறுமி, கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் பொறியாளர் தஷ்வந்த் என்பவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு அவர், ஜாமீனில் வெளியே வந்தார்.
அப்போது, தஷ்வந்த் தனது தாயார் சரளாவை கொலை செய்துவிட்டு, நகைகளுடன் காணாமல் மாயமானார். பின்னர் அவர் மும்பையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
ஆனால் தூக்கு தண்டனையை எதிர்த்து, தஷ்வந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். ஆனால் இந்த அப்பீல் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தூக்கு தண்டனையை கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி உறுதி செய்தது. இதனை எதிர்ப்பு தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குற்றவாளி தஷ்வந்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.