தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை!

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை!

உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், கரூர், மதுரை, காஞ்சிரபுரம், திருவள்ளூர் ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகப்பட்சமாக வெப்பநிலை 35டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com