கி.வீரமணிக்கு நடிகர் ராஜ்கிரண் கண்டனம்!

கி.வீரமணிக்கு நடிகர் ராஜ்கிரண் கண்டனம்!

, கடவுள் இல்லை என்று இரண்டு வார்த்தைகளில் சொல்லி விட்டுப் போய்விட முடியாது. கற்றுத் தெளிய அரசியல் வாதிகளுக்கு நேரமும் இருக்காது.

இந்து கடவுள்கள் மற்றும் பழக்க வழக்கங்களை விமர்சனம் செய்த, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு, பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந் நிலையில் நடிகர் ராஜ்கிரண், தனது முகநூல் பதிவில் கி.வீரமணியை கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கடவுள் இல்லை என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், கடவுள் உண்டு என்பது எங்கள் நம்பிக்கை. மதங்கள் பலவாக இருந்தாலும், அவை அனைத்தின் குறிக்கோளும் ஒன்றே. அது மனிதனை மேம்படுத்துவது. அன்பும், மனித நேயமும்தான் மனிதனை மேம்படுத்தும். அதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன.

அந்த போதனைகளை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக செய்கிறது. அந்த வகையில் இந்து மதம், ராமர் பெருமானையும், கிருஷ்ணர் பெருமானையும், ஆஞ்சநேயர் பெருமானையும், சிவ பெருமானையும், பார்வதி தாயையும், விநாயகப் பெருமானையும், முருகப் பெருமானையும், அவதார தெய்வங்களாக வழிபடச் சொல்வதன்மூலம், மனிதனை மேம்படுத்தும் போதனைகளை செய்கிறது.

இந்த அவதார தெய்வங்கள் மூலம் சொல்லப்படும் அனைத்து செய்திகளும் வாழ்க்கை தத்துவங்கள், அதற்குள் ஊடுருவிப் பார்த்தால் தான் உண்மைகள் புரியும். இந்த அடிப்படையை புரிந்து கொள்வதற்கு நீங்கள் நிறையப் படிக்க வேண்டும். 

எல்லா மத தத்துவங்களையும் கசடற கற்றுத் தெளியாமல், கடவுள் இல்லை என்று இரண்டு வார்த்தைகளில் சொல்லி விட்டுப் போய்விட முடியாது. கற்றுத் தெளிய அரசியல் வாதிகளுக்கு நேரமும் இருக்காது.

ஐயா ஈவேரா, மதங்களின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை ஒழிப்பதற்கு வேறு வழியில்லாமல்தான் கடவுள் மறுப்பு கொள்கையை கையில் எடுத்தாரே தவிர, கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக அல்ல. என்பதுதான் என் கருத்து. 

அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால், சாகும் வரை ராமசாமி என்ற பெயரை தூக்கி சுமந்திருக்க மாட்டார். 

‘கடவுள் நம்பிக்கை இருக்கு, இல்லை என்பதை விட்டு விடுவோம். பிறர் மனதை நோகச்செய்வதும், பிறர் மத நம்பிக்கைகளை காயப்படுத்துவதும், பகுத்தறிவாகுமா, பகுத்தறிவின் உச்சகட்ட மேம்பாடு, அன்பும், மனித நேயமுமாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com