பாமகவுக்கு வெற்றியையும், மத்திய அரசுக்கு தோல்வியையும் கொடுத்துள்ளதாக, பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை -சேலம் வழித்தடத்தில் எட்டுவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக வந்திருக்கும் தீர்ப்பு, பாமகவுக்கு வெற்றியையும், மத்திய அரசுக்கு தோல்வியையும் கொடுத்துள்ளதாக, பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கைத் தொடுத்த அன்புமணியின் வழக்கறிஞரும், பாமக வழக்கறிஞருமான பாலு, செய்தியாளர்களிடம் பேசுகையில், எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. அது தேவையில்லாத திட்டம் என்று பாமக கருதுகிறது. அதனால்தான், இதை எதிர்த்து அன்புமணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். இந்த வழக்கின் தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. இந்த வழக்கில் பாமகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதேசம்யம் மத்திய அர்சுக்கு தோல்வி கிடைத்துள்ளது என்றார்.