தமிழகத்தில் கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், கடந்த ஆண்டு தீ விபத்து நடைபெற்றதை தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்து கோவில் வளாகங்களில் உள்ள கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த குமார் என்பவர் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வியாபாரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற பிறப்பிக்க தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தமிழக அரசு பதில் அளித்தது. கோவில்களில் உள்ள கடைக்காரர்களிடம் கருத்துக்களை கேட்காகது ஏன் என தமிழக அரசுக்கு ஏற்கனவே நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.