தமிழ்நாடு
திமுக கூட்டணியை தோற்கடிக்க சிவனடியார்கள் யாகம்!
திமுக கூட்டணியை தோற்கடிக்க சிவனடியார்கள் யாகம்!
திருப்பூர், சந்திராபுரத்தில் உள்ள ஆனிலையப்பர் சிவமடத்தில் இந்த பூஜைகளை சிவனடியார்கள் நடத்தினர்.
இந்துக்களுக்கு விரோதமான செயல்படும் திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, திருப்பூரில் சிவனடியார்கள், திருவாசகம் முற்றோதுதலுடன், பஞ்சபூத யாக பூஜை நடத்தினர்.
திருப்பூர், சந்திராபுரத்தில் உள்ள ஆனிலையப்பர் சிவமடத்தில் இந்த பூஜைகளை சிவனடியார்கள் நடத்தினர்.
தேர்தல் குறித்து சிவனடியார்கள் சிந்திக்கவில்லை என்றும் அதேசமயம் இந்துக்களை கொச்சைப்படுத்தும் திமுக கூட்டணிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக, இந்த பூஜைகள் நடத்தப்பட்டதாக, சிவனடியார்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்துக்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கு நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.