மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, வைகை அணையில் இருந்து வரும் 16ஆம் தேதி நீர் திறக்கப்படுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, வைகை அணையில் இருந்து வரும் 16ஆம் தேதி நீர் திறக்கப்படுகிறது.
மதுரையில் மிகவும் பிரசித்திப் பெற்ற சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஆண்டுதோறும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. 71 அடி உயமுள்ள வைகை அணையில், தற்போது 42.67 தண்ணீர் மட்டுமே இருக்கிறது. மதுரை மாநகர மக்களின் குடிநீருக்கு 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 1176 மி.கன அடியாக உள்ளது.
இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு வரும் 16ஆம் தேதி மாலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.