சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை சிறுவர்கள் இயக்கி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை சிறுவர்கள் இயக்கி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் எம்.எல்.ஏ.,க்கள் தங்கும் விடுதிக்கு அருகில் இருக்கும் சாலையில் சில தனியார் நிறுவன பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது மெட்ரோ ரயில் பணியாளர்களை அழைத்துச் செல்லும் பேருந்தில் சிறுவர்கள் சிலர் ஏறி விளையாடியுள்ளனர். அவர்கள் விளையாட்டாக ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கியுள்ளனர்.
அவர்கள் எஞ்சின் ஸ்விட்சை அழுத்திய போது பேருந்து திடீரென இயங்க ஆரம்பித்து விட்டது. இதனால் உற்சாகமான சிறுவர்கள் பேருந்தை இயக்கிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மின்வாரியப் பெட்டி ஒன்று மீது மோதி நின்றது. உடனே அங்கிருந்து ஓட முயன்ற சிறுவர்களை, அருகிலிருந்த ஆட்டோ ட்ரைவர் பிடித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து, காவல்துறையினர் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.