சர்ச்சையில் சிக்கிய "பப்ஜி" மதன்: போலீசாருக்கு பயந்து தலைமறைவானார்.!

சர்ச்சையில் சிக்கிய

பப்ஜி ஆன்லைன் கேம் விளையாடி அதனை யூடியூபில் நேரலையாக வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் மதன். தனது நேர்த்தியான யுக்திகளால் எளிதில் வெற்றியை வசப்படுத்தும் மதனின் திறமை பலரின் கவனம் ஈர்த்தது. நேரலையில் வீடியோ வெளியிடும் போது உடன் ஆடும் சக போட்டியாளர்களை கேவலமாக, ஆபாசமான வார்த்தைகளால் விமர்சிப்பது இவரது வழக்கம். ஆரம்பத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் டாக்ஸிக் மதன் 18+ என்கிற மற்றொரு யூ-டியூப் சேனலை அவர் தொடங்கினார். இது பப்ஜி ஆன்லைன் கேம்மை தாண்டி ஆபாச பேச்சுகளின் கூடாரமாய் ஆனது. இதற்கிடையே தன்னுடன் கேமிங்கில் ஈடுபடும் பெண்களையும் சகட்டு மேனிக்கு திட்டி வந்துள்ளான் இந்த மதன்.


ஒருகட்டத்திற்கு மேல் சென்ற அவனது சேட்டைகளை பொறுத்து கொள்ளாத சிலர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து புளியந்தோப்பு சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், மதன் ஆஜராகவில்லை. இதனையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கையாக டாக்ஸிக் மதனின் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்க அதன் தலைமை அலுவகத்திற்கு சைபர் க்ரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும், மதன் எங்கிருக்கிறார் என்பதை அறிய அவரது மொபைல் ஐபி முகவரி மூலமாக போலீசார் முயற்சிக்கையில் மதன் விபிஎன் தொழிற்நுட்பம் பயன்படுத்தி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சிறார்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் என பலர் இணையவழியில் மூழ்கி கிடைக்கும் சூழலில் இதுபோன்ற ஆட்கள் செய்யும் இத்தகைய செயல்களால் பெற்றோரிடையே அச்சம் எழுகிறது. இதனால், சரியான பாதையில் செல்லும் சமூக ஊடங்களுக்கும் அவப்பெயர் தான் மிஞ்சும். விழித்து கொள்வோம்.! விழிப்புணர்வுடன் இருப்போம்.!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்