பணம் கேட்டு காதலன் மிரட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை

பணம் கேட்டு மிரட்டிய காதலன்: மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை..!

கோவையில் பணம் கேட்டு தொந்தரவு செய்த காதலன் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியதால் மனமுடைந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் சிங்காநல்லூரைச் சேர்ந்த லாவண்யா என்ற 19 வயது மாணவி, தனியார் கல்லூரியில் பி.காம்., 2ஆம் ஆண்டு படித்து வந்தார். 

சிங்காநல்லூர் ராமானுஜம் நகரில் தங்கியிருந்து, தனியார் கல்லூரியில் படித்து வந்த மானாமதுரையை சேர்ந்த கேசவகுமார் என்பருடன் லாவண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. 

இந்த நிலையில், இருவரும் தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி லாவண்யாவிடம் இருந்து ரூ.35,000, 2 சவரன் நகைகளை பறித்துள்ளார் கேசவகுமார். மேலும், பணம், நகை கேட்டு தொந்தரவு செய்ததால் லாவண்யா பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த கேசவகுமார், தங்களிடம் உள்ள புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த லாவண்யா ஜூன் 12ஆம் தேதி வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

இது தொடர்பாக லாவண்யாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் போலீஸார் கேசவகுமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்