பொதுப் போக்குவரத்து தொடங்க மக்களின் ஒத்துழைப்பு தேவை

பொதுப் போக்குவரத்து தொடங்க மக்களின் ஒத்துழைப்பு தேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. 

இந்த நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்பு தான் காரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், "கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க பொதுமக்களிடம் இருந்தே கோரிக்கை வந்தன. மக்களின் எண்ணங்களையே தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

தளர்வு அறிவித்ததற்கான உண்மையான நோக்கத்தை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும். மக்களின் ஒத்துழைப்பால் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது; விதிமுறைகளை பின்பற்றி தொற்று குறைய உதவிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

போலி மது மற்றும் கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்து விடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றியே இயங்கும். கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டால் எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும். 

முழு ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்து விரைவில் இயக்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். இதற்கு மக்களின் ஒத்துழைப்பே அவசியம். கொரோனா தொற்று பரவலை விட மக்களுக்கு வல்லமை உள்ளது" என பேசி இருக்கிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்