வீட்டு தனிமையில் இருந்த பெண்: அழுகிய நிலையில் சடலமாக மீட்பு.

வீட்டு தனிமையில் இருந்த பெண்: அழுகிய நிலையில் சடலமாக மீட்பு.

தஞ்சை மாவட்டம் காசாங்காடு கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரிந்து வருபவர் செந்தில் அரசி. இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். நான்கு நாட்களுக்கு முன் வீடு திரும்பி தனிமைப் படுத்திக்கொண்டு இருந்த செந்தில் அரசிக்கு உறவினர்கள் வீட்டின் வெளியே உணவை வைத்து சென்று வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக செந்தில் அரசி கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் உள்ளே சென்றபோது செந்தில் அரிசி அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு தமுமுகவினர் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்