முதல்முறையாக முதல்வராக பிரதமரை சந்திக்கும் ஸ்டாலின்..!

முதல்முறையாக முதல்வராக பிரதமரை சந்திக்கும் ஸ்டாலின்..!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிற 17ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக கடந்த மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், பதவியேற்ற நாள் முதல் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். தமிழ்நாட்டில் நாள்தோறும் 30ஆயிரத்துக்கு மேல் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 20ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்த நிலையில், ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் பிரதமர் மோடியை அவர் வருகிற 17ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லி செல்லும் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக நலத் திட்டங்களுக்கான கோரிக்கை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரும்பூஞ்சை மருந்து, கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு விலக்கு, தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்