’அந்த பயம் தான் எனக்கு வேணும்’.. வியாசர்பாடி ரவுடியின் அட்டகாசம்!

’அந்த பயம் தான் எனக்கு வேணும்’.. வியாசர்பாடி ரவுடியின் அட்டகாசம்!

மக்களுக்கு தன் மீது பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ரவுடி அட்டகாசத்தில் ஈடுப்பட்டார்.

 சென்னை வியாசர்பாடி பெரியார் நகர் பகுதியில் எஸ்.பி.ஏஜென்ஸி என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மாதவரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை இவர் பணியில் இருந்தபோது அந்த பக்கமாக குடிபோதையில் கத்தியுடன் வந்த நபர் ஒருவர் கருப்பசாமியை தான் கையில் வைத்திருந்த கத்தியால் முதுகில் தாக்கிவிட்டு அருகில் இருந்த சிக்கன் கடை உட்பட மூன்று கடைக்குள் சென்று அங்கிருந்த கண்ணாடிகள் மற்றும் பொருட்களை கத்தியால் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் அதே பகுதியை சேர்ந்த ரவுடி மகேஷ் என்பவர் கடையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக புகாரினை பெற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் வியாசர்பாடி பகுதியில் பதுங்கி இருந்த பெரியார் நகரைச் சேர்ந்த மகேஷ்(29) என்பவரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் மகேஷ் மீது செம்பியம், திருவிக நகர், சோழவரம் ஆகிய காவல் நிலையங்களில் அடிதடி, பணம் பறிப்பு, கொலை மிரட்டல், கொலை முயற்சி என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. மேலும் இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார் என்பதும், சிறையிலிருந்து வெளியே வந்த இவருக்கு மது மற்றும் கஞ்சா குடிக்க பணக்கஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இவர் பலரிடம் பணம் கேட்டும் யாரும் தரவில்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மக்களுக்கு தன் மீது பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே நேற்று இதுபோல சம்பவத்தில்  ஈடுப்பட்டதாக போலீசாரிடம் கைது செய்யப்பட்டுள்ள மகேஷ் தெரிவித்துள்ளர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்