தமிழ்நாடு
தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா: இன்றைய அப்டேட்.
தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா: இன்றைய அப்டேட்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 26,513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 26,513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 1,67,397 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 26,513 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 21,23,029-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 2,467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 31,673 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 18,02,716-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரேநாளில் 490 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 24,722 பேர் உயிழந்துள்ளனர்.