தமிழ்நாடு
கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தாயுடன் கத்திச்சண்டை போட்ட மகள்.
கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தாயுடன் கத்திச்சண்டை போட்ட மகள்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியை சேர்ந்தவர் ஷோபனா பட்டவுரியா.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியை சேர்ந்தவர் ஷோபனா பட்டவுரியா. இந்தப் பெண்மணி கொரோனா தொற்று ஏற்பட்டு 15 நாட்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவரது கணவருக்கும் இவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு செலவு செய்யப்பட்ட தொகை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கணவர் சஞ்சய் பட்டவுரியா மற்றும் மகள் வன்ஷிகா பட்டவுரியா அந்த பெண்மணியை தாக்கியுள்ளனர். கத்தியை கொண்டு தாக்கியதால் செய்வதறியாது திகைத்து போன ஷோபனா ஆக்சிஜன் மாஸ்க்குடன் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். காவல்நிலையத்தில் ஷோபனா புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.