தமிழ்நாடு
வேலைக்காக மதம் மாறினால் பணிநீக்கம் செய்யுங்க: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.
வேலைக்காக மதம் மாறினால் பணிநீக்கம் செய்யுங்க: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.
பணிக்காக மதம் மாறியது தெரியவந்தால் பணிநீக்கம் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தகுதியில்லாதவரை நூலக தொழில்நுட்ப அதிகாரியாக நியமித்ததை எதிர்த்து வழக்கு ஒன்று தொடரப்பட்டது. கவுதமன் என்பவர் நியமத்தையும் பதவி உயர்வையும் ரத்து செய்யகோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவுகளை பிறப்பித்தது. அதில், "பல்கலைக்கழங்களில் இடஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற மதம் மாறியது தெரியவந்தால் பணி நீக்கம் செய்யலாம். போலி சான்று அளித்து பணியில் சேர்ந்தது தெரியவந்தால் பணிநீக்கம் செய்து ஊதியத்தை திரும்ப பெற வேண்டும். பல்கலைக்கழங்கள், கல்வி நிறுவனங்கள் பணி நியமனத்தின்போது வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.