தமிழ்நாடு
தமிழகத்தில் நாளை முதல் தடுப்பூசி போடப்படும்
தமிழகத்தில் நாளை முதல் தடுப்பூசி போடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!
நாளை முதல் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறை தகவல்
தமிழகத்தில் ஜூன் 3 முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் கருப்பு பூஞ்சை சோதனை மையத்தை இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "4.20 லட்சம் தடுப்பூசிகள் இன்று வரவிருப்பதால் தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும்" என்றார்.