பொதுவாழ்வில் பக்குவம் முக்கியம் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் கோவா போன்ற சிறிய மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அம்மாநில அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அந்த கோரிக்கையை எதிர்த்ததாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், வானதி சீனிவாசன் பதவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நடந்துகொண்ட விதம் ஜனநாயகத்தை அவமதிப்பது போலவும், அரசின் பிம்பத்தை கெடுப்பது போலவும் அமைந்துள்ளது. எனவே, பி.டி.ஆர். தியாகராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்" என அவரை டேக் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "நீங்கள் கூறும் பொய் புகார்களில் என்னை டேக் செய்வதை விட்டுவிட்டு நிஜத்தில் பயனுள்ளதை ஏதாவது செய்யுங்கள். நீங்கள் பிறவிலேயே பொய்யரா இல்லை உங்களுக்கு உண்மையில் IQ குறைவா.? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் யாரும் யாரையும் அவமதித்து விடலாம் என நினைக்கிறீர்களா.? என மறுபதிவிட்டு வானதி சீனிவாசனை பிளாக் செய்துவிட்டார்.
இதனை கடுமையாக விமர்சித்துள்ள வானதி ஸ்ரீனிவாசன், "நீங்கள் நம் மாநிலத்தின் நிதியமைச்சர் என்பது வருத்தமளிக்கிறது. நீங்கள் என்னை ஒரு பொய்யர் அல்லது அறிவுத்திறன் குறைந்த நபர் என்று அழைக்கலாம். ஆனால் உண்மையை மாற்ற முடியாது" என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்படி சமூக ஊடங்களில் சண்டையிடுதல் குறித்து பதிலளித்துள்ள கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், "நான் திட்டினால்கூட மரியாதையாகத் திட்டும் ஊரில் பிறந்திருக்கிறேன். பொது வாழ்க்கையில் இருக்கும் அனைவரும் விமர்சனத்தை எதிர்கொள்ள தான் வேண்டும். தவறு இருந்தால் திருத்திக்கொள்ள முன் வரவேண்டும். பொதுவாழ்வில் அந்தப் பக்குவம் முக்கியம்" என தெரிவித்துள்ளார்.