முழு ஊரடங்கு காலத்திலும் இளைஞர்கள் சிலர் சாலையில் கத்தியுடன் சுற்றித்திரியும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முழு ஊரடங்கு காலத்திலும் இளைஞர்கள் சிலர் சாலையில் கத்தியுடன் சுற்றித்திரியும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொரோனா 2-வது அலை காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா பரவல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் மேலஉளூர் என்ற இடத்தில் இளைஞர்கள் சிலர் பட்டா கத்தியுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டி அத்தனையும் வீடியோ எடுத்து பகிர்ந்து வருகின்றனர். சென்னையில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கழிப்பறையில் வழுக்கி விழுந்த செய்தியை இந்த இளைஞர்கள் அறியவில்லை என்பதுபோல் தோன்றுகிறது. இந்த வீடியோக்கள் வைரலானதால் காவல்துறையினர் அந்த இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.