ரூ.2000 நிவாரணம் பெறாதவர்கள் இம்மாதம் பெறலாம்

ரூ.2000 நிவாரணம் பெறாதவர்கள் இம்மாதம் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்..!
ரூ.2000 நிவாரணம் பெறாதவர்கள் இம்மாதம் பெறலாம்

கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.2000 கடந்த மாதம் பெறாதவர்கள் இம்மாதம் பெறலாம்

கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.2000 கடந்த மாதம் பெறாதவர்கள் இம்மாதம் ரேஷன் கடையில் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, "தமிழகத்தில் 2.09 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மே 15 முதல் கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. 

நேற்று வரை 98.4 சதவீதம் குடும்பத்தினர் நிவாரண உதவித்தொகையை பெற்றுள்ளனர். மீதமுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்று முழு ஊரடங்கால் சொந்த ஊர் சென்றுள்ளனர். முகவரி மாற்றம் ,போக்குவரத்து வசதி இல்லாததால் ரேஷன் கடைக்கு செல்ல முடியாத நிலை போன்றவற்றால் நிவாரண உதவித் தொகை பெற இயலவில்லை. 

எனவே அவர்கள் நிவாரண உதவித் தொகையை இம்மாதம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com