நடிகை பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் போலீஸார் விசாரிக்க திட்டம்

நடிகை பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் போலீஸார் விசாரிக்க திட்டம்
நடிகை பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் போலீஸார் விசாரிக்க திட்டம்

நடிகையின் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகையின் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை சாந்தினி அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, அவரால் கர்ப்பமாகி 3 முறை கருவுற்ற கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டி போலீஸில் புகார் அளித்தார். ஆனால் இதற்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸார் முன்னாள் அமைச்சர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த பாலியல் புகார் வழக்கில் சம்மன் அனுப்பி முன்னாள் அமைச்சர் மணிகண்டனை விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. 

அத்துடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை பாலியல் புகார் அளித்த விவகாரத்தில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் கோபாலபுரம் தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிள்ளனர்.

இந்த வழக்குகளின் ஒவ்வொரு பிரிவுக்குமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com