பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் நமக்குக் கிடைத்துள்ள சங்கநூல்கள். ஆகும்.
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் நமக்குக் கிடைத்துள்ள சங்கநூல்கள். ஆகும். அவற்றில் தற்போது கிடைத்துள்ள சங்கப்பாடல்கள் 2381.
அவற்றுள் 2279 பாடல்களுக்கு மட்டுமே அவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. ஏனைய பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை.
இந்த நிலையில் பத்துப்பாட்டு நூல்கள் தொகுப்பில் உள்ள ஒவ்வொன்றும் தனித்தனி நூல் ஆகும். இந்தத் தொகுப்பு முழுமைக்கும் அவற்றுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை கடவுள் வாழ்த்தைப் போல முதல் நூலாக வைத்துப் பத்து என்று எண்ணப்பட்டுள்ளது.
எட்டுத்தொகை நூல்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை நூல் தொகுக்கப்பட்ட காலத்தில் சேர்க்கப்பட்டவை. அவற்றையும் சேர்த்துதான் இந்த 2381. மொத்தம் உள்ள பாடல்களில் ஆசிரியர் பெயர் தெரிந்த 2279 பாடல்களைப் பாடிய புலவர்கள் 475 பேர்.
மேலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பாடிய புலவர்களைச் சங்கம் மருவிய காலப் புலவர்கள் என்று கூறுவர். கபிலர் என்னும் புலவர் சங்க காலப் புலவர் பட்டியலிலும், சங்கம் மருவிய காலப் புலவர் பட்டியலிலும் உள்ளார். இவர்கள் வெவ்வேறு புலவர்கள் ஆவர்.