கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி

கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி: மு.க.ஸ்டாலின் அதிரடி..!
கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி

ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது, கொரோனாவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்

ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது, கொரோனாவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். 

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "மக்கள் கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடித்தால் ஊரடங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். ஆக்ஸிஜன் அளவு 90க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை: வழிகாட்டு நெறிமுறை என்றார். 

கொரோனா தொற்றால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அதற்காக மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் இரு மாதங்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது. 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை இப்படி நீட்டித்துக்கொண்டிருக்க முடியாது. ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது. கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறியுள்ளார். 

மக்களை காக்கும் மகத்தான பணியில் என்னை நான் ஒப்படைத்துள்ளேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையே தேவை. தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக செயல்படும். கொரோனாவை வெல்வோம்! நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்!" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com