கோவையை ஆட்டி படைக்கும் கொரோனா: 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

கோவையை ஆட்டி படைக்கும் கொரோனா: 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை கடந்ததால் பொதுமக்களிடையே பேரச்சம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் கடந்த சில மாதங்களாக, அதிகரித்து வரும் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் கட்டுக்கடங்காமல் கொரோனா பாதிப்பு சென்று கொண்டிருக்கிறது.

கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்றுவரை 97,845 ஆக இருந்த நிலையில், தற்போது 1,00,546 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை 793 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமல்  ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே சிகிச்சைபெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.பொது மக்கள் போதிய விழிப்புணர்வுடன் அரசாங்கத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்