தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் இடியுடன் கனமழை..!

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் இடியுடன் கனமழை..!

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாகவே தினந்தோறும் மழை பெய்து வருகிறது.  அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், வேலூர், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.  

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்