தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது: ராதாகிருஷ்ணன் தகவல்..!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தி இருக்கும் நிலையில் பாதிப்புகள் குறைந்து வருவதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. அதில் குறிப்பாக தமிழகத்தில் இரண்டு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "இந்தியாவில் கொரோனா பரவல் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனாலம் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. 

ஆனாலும் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்திய பிறகு கொரோனா பரவல் விகிதம் குறைய தொடங்கியுள்ளது என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்