பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது

பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது: அமைச்சர் விளக்கம்..!

பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார், 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "15 நாள் அல்லது ஒரு மாதத்துக்கு முன்பாகவே பிளஸ் டூ தேர்வு தேதியை அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும். 

தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களின் ஒருமித்த கருத்து. கொரோனா தொற்று குறைகிறதா? என்பதை பொறுத்து தான் பொதுத் தேர்வு அறிவிக்கப்படும். பிளஸ் 2 பொதுத் தேர்வு தள்ளி போகுமே தவிர ரத்து செய்யப்படமாட்டாது. மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்படும்" என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்