5 ரூபாய் போட்டால் மாஸ்க் வரும் இயந்திரம்: முழு விவரம் இதோ..!

5 ரூபாய் போட்டால் மாஸ்க் வரும் இயந்திரம்: முழு விவரம் இதோ..!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா பரவலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அணியாமல் வெளியே வந்தால் அவர்களிளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், அனைவருக்கும் மாஸ்க் கிடைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தனியார் அமைப்பு ஒன்று 5 ரூபாய் செலுத்தினால் மாஸ்க் வழங்கும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ளது. 

இந்த இயந்திரம் தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் பொதுமக்கள் 5 ரூபாய் செலுத்தினால் ஏடிஎம்-ல் இருந்து பணம் வருவது போலவே மாஸ்க் வரும். அதனை எடுத்து பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 

பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் மாஸ்க் இயந்திரம் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனை தனியார் அமைப்பு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்