உதவி செய்ய யாருமில்லாமல் மருத்துவமனையில் தத்தளித்து வரும் கொரோனா நோயாளிகள்!

உதவி செய்ய யாருமில்லாமல் மருத்துவமனையில் தத்தளித்து வரும் கொரோனா  நோயாளிகள்!

கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் போதிய உதவியாளர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகள் பெரும் கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர்.

கோவையில் கொரோனாவின் பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா நோய்த்தொற்று அனைத்து மக்களையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது இந்நிலையில் இஎஸ்ஐ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஒருநாளைக்கு  உணவு பெறுவதற்காக தினமும் மூன்று மாடிகள் ஏறி இறங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மூன்றாவது மாடியில் இருக்கும் கொரோனா வார்டில் 20 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள்  நுரையீரலில்  பாதிப்பு உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.பொள்ளாச்சியை சேர்ந்த 55 வயதான நோயாளி ஒருவர் அவர்களுடைய வார்டில்  உதவியாளர்கள் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கூறுகிறார். மேலும் அவர் ஒரு  நீரிழிவு நோயாளி என்பதால் படிக்கட்டுகளை ஏறி இறங்க முடியவில்லை என்றும் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் கணபதியை சேர்ந்த 38 வயதான நோயாளி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கடந்த நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மயக்க நிலையில் இருந்ததாகவும் ,அவரை கவனிக்க யாரும் இல்லை என்றும் கூறுகிறார்.அந்த நாற்றத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனையில் புகார் செய்யப்பட்டது.அந்த மருத்துவமனையின் மூத்த அதிகாரி பேசும் போது,போதிய ஊழியர்கள் இல்லாததால் ஒவ்வொரு நோயாளிகளுக்கும்  உதவியாளர்களை நியமிப்பது கடினம் என்று குறிப்பிட்டுள்ளார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்