தமிழகத்தில் ஒரே நாளில் 298 பேர் உயிரிழப்பு..!

வேகமெடுக்கும் கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 298 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 298 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 29, 272 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 7,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 298 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,178ஆக அதிகரித்துள்ளது.

இந்திய அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 181ஆக அதிகரித்துள்ளது. சுமார் 19,182 பேர் நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், சென்னையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்துள்ளனர். இணைநோய் இல்லாத 78 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்