முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய சீமான்..!

முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய சீமான்..!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மே 7ஆம் தேதி பதவியேற்ற பிறகு, பல பொறுப்புகளுக்கு புதிய அதிகாரிகளை நியமித்து வருகிறார். தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார். இதேபோல் முதல்வரின் தனிச்செயலாளராக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தார்.

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளர். இவர்கள் அனுபவம் பெற்ற நேர்மையான அதிகாரிகள் என பெயர் பெற்றதால் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. 

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ.இறையன்புக்கும், முதல்வரின் முதன்மைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள உதயச்சந்திரன் உள்ளிட்ட நான்கு குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

மக்களுக்கான பணிகள் சிறக்கவும், நல்லதொரு நிர்வாகத்தை அளித்திடவும் நேர்மையும், திறமையும் மட்டுமல்லாது சமூகப்பற்றும் கொண்ட ஐயா இறையன்பு, திறம்பட நிர்வாகம் செய்யும் ஆற்றல்கொண்ட சகோதரர் உதயச்சந்திரன் போன்றவர்கள் நிர்வாகப் பணிகளில் முதன்மையாக முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது" என பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்