நாளை முதல் முழு ஊரடங்கு: காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை

நாளை முதல் முழு ஊரடங்கு: காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை..!

கொரோனா பரவல் காரணமாக தமிழக்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதால் காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கி இருக்கிறார்.

 

தமிழகத்தில் நாளை முதல் 24ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில், முழு ஊரடங்கின்போது காவல்துறையினர் செயல்படுவது குறித்து டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார். 

இதன்படி, "பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதையை குறைவாகவோ மக்களிடம் நடந்துகொள்ளக்கூடாது. 

மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை ஒலிபெருக்கி பயன்படுத்தி தவிர்க்க வேண்டும். தடியடி நடத்துவது போன்றவை பயன்படுத்தி கூட்டத்தை கலைக்கும் செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது" என கேட்டுக்கொண்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்