சட்டமன்றத்தின் பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு..!

சட்டமன்றத்தின் பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு..!

பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சிஷன் ரெட்டியின் தலைமையிலான கூட்டம் நடபெற்றது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தமிழக மாநிலத்தலைவர் எல். முருகன், “தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள். தமிழகத்தில் பாஜக காலுன்ற முடியாது என்றார்கள்; தற்போது தாமரை மலர்ந்துள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆலோசனை வழங்க தயாராக இருக்கும் நாங்கள், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.

மேலும், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்ற நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தின் பாஜக குழுத் தலைவராக தேர்வு செய்யப்படுவதாக எல்.முருகன் அறிவித்தார். 

முன்னதாக, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்த பாஜகவிற்கு 20 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. அதில் பாஜக நான்கு இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்