’ஸ்டாலின் தாத்தா! கொரோனாலர்ந்து எல்லாரையும் காப்பாத்துங்க.. இந்தாங்க 1000’ – முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பிய சிறுவன்.

’ஸ்டாலின் தாத்தா! கொரோனாலர்ந்து எல்லாரையும் காப்பாத்துங்க.. இந்தாங்க 1000’ – முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பிய சிறுவன்...

மதுரையைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தான் சிறுகச்சிறுக உண்டியலில் சேர்த்து வைத்த 1000 ரூபாய் பணத்தை, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து முதல்வர் முக.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தான்.

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவன் ஹரிஸ்வர்மன், இவன், உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை வங்கி வரைவோலை மூலமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்ததோடு, தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்து கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கூறிய ஹரிஸ்வர்மன், “ரெண்டு வருசமா சைக்கிள் வாங்க கொஞ்சம் கொஞ்சமா உண்டியல்ல சேத்து வச்சிருந்த பணத்த, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுக்கலாமான்னு அப்பாகிட்ட கேட்டேன். அப்பா சரின்னு சொன்னாங்க. உடனே உண்டில்ல இருந்த பணத்த ஸ்டாலின் தாத்தாவிற்கு அனுப்பினேன்” என மழலை குரலில் ஹரிஸ்வர்மன் கூறினான்.

இளம் வயதில் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இச்சிறுவனின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்