சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்..!

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்..!

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87.

பல வழக்குகளில் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட டிராபிக் ராமசாமி, சமூக ஆர்வலராக மக்கள் மத்தியில் பிரபலமானார். அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரித்து நடித்தார். 

அண்மையில் சட்டமன்ற தேர்தலில் சோழிங்கநல்லூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இவர் சில திரைப்படங்களில் பணம் வாங்காமல் நடித்திருக்கிறார்.   

இந்த நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் ஏப்ரல் 4ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகப் பிரச்சனையால் அவதியுற்ற அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். 

ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி (மே 4) சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்களும், வலைதளவாசிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்