தமிழ்நாடு
ஈஷா வித்யா பள்ளிகளை கொரோன சிகிச்சைக்கு பயன்படுத்திக்கோங்க: ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு.
ஈஷா வித்யா பள்ளிகளை கொரோன சிகிச்சைக்கு பயன்படுத்திக்கோங்க: ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஈஷா அறக்கட்டளையின் ஈஷா வித்யா பள்ளி வளாகங்கள் உள்ளன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஈஷா அறக்கட்டளையின் ஈஷா வித்யா பள்ளி வளாகங்கள் உள்ளன. இவற்றை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற தமிழக அரசுக்கு கொடுப்பதாக அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் டுவிட்டரில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், "ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை 990 படுக்கை வசதியுடன் கூடிய கோவில் மையங்களாக பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசிற்கு கொடுக்கிறோம். இந்த சவாலில் இருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.