கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் 12 சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2ஆம் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொறுத்த வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகத்தில் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராமேஸ்வரம், குமரி வாராந்திர சிறப்பு ரயில்கள் சனி, திங்கள், புதன் நாட்களில் மே 1 முதல் ரத்து செய்யப்படுவதாகவும், குமரி - ராமேஸ்வரம் வாரம் மும்முறை சிறப்பு ரயில் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.