தமிழ்நாடு
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மர்மநபர்கள்: அதிரடி பதில் கொடுத்த நடிகை.
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மர்மநபர்கள்: அதிரடி பதில் கொடுத்த நடிகை.
சமூக வலைத்தளங்களில் தனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடுத்தவர்களுக்கு நடிகை விந்தியா கொடுத்துள்ள பதிலடி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகையும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான விந்தியா நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் சூறாவளியாக சுற்றி ஆதரவு திரட்டி அனைவரிடமும் கவனம் பெற்றார். இந்நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக ஒரு போஸ்டர் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. இதனை பார்த்த விந்தியா பதிவு செய்துள்ள டுவீட்டில், "உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா" என பதிலடி கொடுத்துள்ளார்.