கொரோனா பரவலை தடுக்க 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 15,684 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 97ஆயிரத்து 672ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் 94 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,651ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், ஞாயிறு (ஏப்.25) அன்று முழு பொதுமுடக்கத்தால் கொரோனா தொற்றின் வேகம் சற்றே குறைந்திருக்கிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு வழியை பின்பற்றி வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோர் வெற்றிலை, பாக்கு, குட்கா பொருட்கள் மெல்ல தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது