போதையின் உச்சத்திற்கு சென்ற நபர்… தனக்குத் தானே தீ வைத்து கொண்டதால் அதிர்ச்சி!

போதையின் உச்சத்திற்கு சென்ற நபர்… தனக்குத் தானே தீ வைத்து கொண்டதால் அதிர்ச்சி!
போதையின் உச்சத்திற்கு சென்ற நபர்… தனக்குத் தானே தீ வைத்து கொண்டதால் அதிர்ச்சி!

சென்னையில் மது போதையில் ஒருவர் தனக்கு தானே தீ வைத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மது போதையில் ஒருவர் தனக்கு தானே தீ வைத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மூத்த மகன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் விரக்தி அடைந்து வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது குடித்துவிட்டு போதையில் தகராறு செய்ததால் அவரது மனைவி ஜெயந்தி அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வருத்தமடைந்த அவர் நேற்று மதியம் குடிபோதையில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். 

பின்னர் வலி தாங்க முடியாமல் செங்குன்றம் பெரம்பூர் நெடுஞ்சாலையில் அலறியபடி ஓடியுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். 

இதுகுறித்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com