நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தை பெற்ற பெண்ணை ஸ்ட்ரெட்சரில் கீழே தள்ளிவிட்ட சம்பவம் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தை பெற்ற பெண்ணை ஸ்ட்ரெட்சரில் கீழே தள்ளிவிட்ட சம்பவம் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. நாகை மாவட்டம் திட்டச்சேரி தேவங்குடி கிராமத்தை சேர்ந்த முருகவல்லி என்கிற பெண் பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த நிலையில், முருகவல்லிக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. முடிவு வருவதற்குள் முருகவல்லி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொற்று இல்லை என சோதனை முடிவுகள் வந்த நிலையில் வேறு வார்டுக்கு மாற்ற வந்த மருத்துவமனை பணியாளர் முருகவல்லியை ஸ்ட்ரெச்சரில் ஏற்றிய உடனேயே தள்ளிவிட்டு ஒருமையில் சாடியுள்ளார். இதனால் முருகவல்லியின் உறவினர்களுக்கும், மருத்துவ பணியாளருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், தன்மீதுள்ள தவறை உணர்ந்த மருத்துவ பணியாளர் முருகவல்லியை பத்திரமாக வார்டுக்கு கொண்டு சென்றார்.