இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில் முன்பதிவு செய்ய ஒரு இணையத்தை தொடங்க உள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில் முன்பதிவு செய்ய ஒரு இணையத்தை தொடங்க உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களில் வேகமாக அதிகரிக்க தொடங்கிய நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியா முழுவதும் மாநில வாரியாக ஊரடங்கு, தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையிலும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த நிலையில் உள்ளது.
இந்நிலையில் மே 1 முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதனால் 18 வயது மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு வருகிற ஏப்ரல் 24ம் தேதி http://cowin.gov.in இணையதளத்தில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.