தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு 12 மணியாகலாம் : சத்யபிரதா சாகு

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு 12 மணியாகலாம் : சத்யபிரதா சாகு
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு 12 மணியாகலாம் : சத்யபிரதா சாகு

வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மே 2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றன. மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கையை எப்படி நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையத்துடனும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து மே 2ம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். 

மே 2ம் தேதி காலை 8:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் அன்றைய தினம் நள்ளிரவுக்குள் அனைத்து முடிவுகளும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு சில கட்டுப்பாடுகள் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்படும் என்றும் அந்தக் கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடித்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com