தமிழ் அறிவோம்: ஏலாதியின் சிறப்பு..!

சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பவரால் எழுதப்பட்ட நூல் ஏலாதி. இதில் 81 பாடல்கள் உள்ளன. ஏலாதி என்ற நூல், ஏலத்தை முதலாகக் கொண்ட இலவங்கம்,சிறு நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஏலாதி என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது.
மேலும், இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக்கூறி மக்களின் ஒழுக்கக் குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது.
இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு.
அழகு என்னும் பொருள்பட வரும் ஏலாதிப் பாடல்களில் ஒன்று ஆகும்.
Pollsகருத்துக் கணிப்பு

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

ஊழல் மிகுந்த இந்து அறநிலைத்துறை?
