மர்மம் ...போலீஸ் நிலையத்தில் திடீரென வெடித்த எஸ்.பி துப்பாக்கி

மர்மம் ...போலீஸ் நிலையத்தில் திடீரென  வெடித்த எஸ்.பி துப்பாக்கி

பழனி என்பவர் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வருபவர். இவர் நேற்று மதியம் மாதனூரில் உள்ள வாகன சோதனைச்சாவடி மையத்தில் பணி முடித்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையம் வந்தார். அங்கு எழுத்தராக பணிபுரிந்து வரும் சேதுசேகரன் என்பவரிடம், புல்லட் அனைத்தும் இருக்கிறதா? என்பதை சரிபார்த்து குறித்துக்கொள்ள வேண்டுமென்று கூறியுள்ளார் .மேலும் தன்னிடம் இருந்த 9மிமீ மற்றும் 5 ரவுண்டு கொண்ட பிஸ்டலை கொடுத்துள்ளார். 

அதை சேதுசேகரன் வாங்கும்போது, தவறுதலாக கை பட்டதாக தெரிகிறது. இதில் பிஸ்டல் திடீரென வெடித்துள்ளது.அப்போது புல்லட் அருகில் இருந்த சுவரில் பட்டு தெறித்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் புல்லட் வெடித்த அறைக்கு பயமுடன்  ஓடினர்.அங்கு சென்று பார்த்தபோது யாருக்கும் எந்த வித காயமின்றி அதிர்ஷ்டவசமாக ஒன்றும் நடக்கவில்லை . பிஸ்டல் வெடித்ததால் அந்த இரண்டு நபர்களும் குழம்பியபடி அதிர்ச்சியுடன் நின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்