மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி: சரத்குமார் அறிவிப்பு..!

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கப்படும் என சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்திருந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, தற்போது மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளது.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் கட்சி தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பேசிய அவர், "எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளோம். கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை முன்னிறுத்தியே தேர்தலை சந்திக்க உள்ளோம்" என்றார்.
Pollsகருத்துக் கணிப்பு

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

ஊழல் மிகுந்த இந்து அறநிலைத்துறை?
