பாமகவுக்கு 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு..!

பாமகவுக்கு 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு..!

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அ.தி.மு.க. சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், "நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலைச் சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கும், பா.ம.க.வுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு தமிழகத்தில் 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் விவரம் பின்னர் முடிவு செய்யப்படும்" என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்றும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்