120 ஆடுகள், 300 கோழிகள்…முனியாண்டி சுவாமி கோவிலுக்கு அன்னதானம் செய்ய பக்தர்கள் காணிக்கை…!

120 ஆடுகள், 300 கோழிகள்…முனியாண்டி சுவாமி கோவிலுக்கு அன்னதானம் செய்ய பக்தர்கள் காணிக்கை…!

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 120ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்குப் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் தயார் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று ஒரு தரப்பினரும், மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றொரு தரப்பினரும் பிரியாணி திருவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் 86வது ஆண்டு பிரியாணி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இதற்காகப் பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி, விரதம் மேற்கொள்வர். 

இந்நிலையில் நேற்று(பிப்.26) விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இந்த விழாவிற்குத் தமிழகம், ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல இடங்களில் ஸ்ரீமுனியாண்டிவிலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்பட, ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

விழாவின் நிறைவாகப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 120ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்குப் பலியிடப்பட்டு, 2500 கிலோ பிரியாணி அரிசியில்  அசைவ பிரியாணி அண்டா அண்டாவாகத் தயார் செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்குவார்கள்.

இந்த மெகா அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இதற்கிடையே தமிழகம் முழுவதும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வரும் அதன் உரிமையாளர்கள், இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாட்கள் விடுமுறை விட்டு விடுவார்கள்.

இதில் எந்த வித மத, சாதி வேறுபாடுகள் இல்லாமல் பல தரப்பட்ட மக்களும் கலந்து கொள்வது வழக்கம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்